Wednesday, 24 April 2024

akka kuil

ஆண்டாண்டு இவ்விடம்  வலசை வரும் அக்கா குயிலே 

ஏனோ இம்முறை இன்னமும் ஏங்க வைக்கிறாய் 

உன் வலசை பாதை வரும் பூஞ்சை பருந்தும் சிவப்பு வல்லூறும் வந்து சேர்ந்தன 

ஏனோ நீ வரவில்லை இன்னமும் 

காரணம் அறியேன் நண்பா 

இவ்விடம் இயற்கை அழித்து மனித நாகரிகம் வந்ததாலோ 

வேறு இடம் நோக்கி நீ பறந்ததாலோ 

இல்லை உன் ஆயுள் முடிந்து விண்ணுலகம் சென்றதாலோ 

Friday, 8 January 2016

BIRD WATCHING TECHNIQUE


When going for birding, the advise is to take field guides, a good binoculars, a note book and a pen or pencil.  Some senior members of the group regret that most people don't carry all the above items and instead carry a camera.

Whether all the listed items are to be carried or a camera will do? A systematic study of birds started only after the British got involved into and they were rulers and basically hunters than bird watchers. Abundant numbers of specimen were available for them to physically see and classify, make notes etc..  Even Dr. Salim Ali has stated that he has used mist nets and has shot birds for physical examination. Even after the cameras were put into use, those were with films and costly and films can not be just wasted. The results were known only after processing in the studio labs. So the birders were left to imagination till such time a good photograph was made.


After development of digital technology in cameras, shooting with cameras has become very easy with easy shoot modes, practically no cost for the photos and also the latest cameras are easy to carry and are having high zoom that they can reach out a small bird sitting at a very long distance easily.

With more amateurs in the field, there are more number of people with cameras and photos are taken in different angles and within short time they are  shared in the circle to confirm the identity of the bird.

Internet is handy and there is no difficulty in identifying a particular species when you have a photo of the bird.

While looking through a binocular is enjoyable, when it comes to identification of new species and is not clearly visible, some record shots are carried and circulated. The experts in the field can always identify a bird from the silhouettes, place etc.   

Further, photographs have a record of date and time and latest cameras are with GPRS which record places also and there is no better record than this.

The cameras are of immense use as now one can not catch a bird physically due to strict Wild Act Laws, lower population and rarity of the birds apart from accessibility for a good view of the bird. Heavy zoom cameras help to take good photographs in any number with immediate screen view facility and the picture are recorded with places, date etc. They form good record and when kept systematically easy to access in the computers and to pass on. 

Thursday, 31 December 2015

கிராமம் 


பளிங்கு வெள்ளை சுண்ணம்! 
 வடிவற்ற வடிவு !
குறுகல் சந்துகள் 
குளம்படி பாதைகள் !
மாலை வெயிலின் 
மாயா ஜாலங்கள் !
ஒற்றை அரசமரத்தின் 
ஓங்கார கிளைகளில் 
பறவைகளின் பன்னொலிகள் 
லேசாய் மனதீற்றலில் !

கிராமியமழிந்து நகரியம் புகுந்தது 
ஆடம்பரம் வந்து எளிமை அழிந்தது .

Monday, 28 December 2015


BROWN BREASTED FLYCATCHER.

On 27/12/2015, we made a birding trip to Nellithurai and Kallar near Mettupalayam  which  are reserve forests of Nilgiri. Both the places are thickly wooded with a decent population of all wild animals, birds and other flora and founa. A fair amount of agriculture is also going on in those places with the main crop being aricanut otherwise called as betel nuts. With rich source of Bhavani river, some even grow banana.

As usual, we had to look at the high trees with thick foliage and the tiny birds of these areas love to hide behind the leaves, occasionally giving a small peep or a burst flight to the next tree making difficult to see them. It is very difficult to identify these small birds as they appear only for seconds and all small details cannot be noticed at one go. Taking photograph is also very difficult.

As we were walking towards the river, we watched a small bird and it looked a familiar and some even identified as Asian Brown Fly catcher.  As I was not having my binoculars with me, I looked the bird through my High zoom camera and also took 2-3 photographs with great amount of difficulty.  As mine is not a SLR and I usually put the lens under auto mode, the camera struggles to focus the object.  Something in me told that the bird was not Asian Brown Flycatcher. I asked my daughter to see the tail whether it looks rusty expecting it to be a Rusty tailed Flycatcher which inclines to such a dense and cooler place like this.  However, this could not be confirmed due to the bird’s movement and we had to move on to the next spot.

As we travelled a good distance I was very tired in that evening and could not load the photos in my computer. Only the next day I was able to load and as usual, I sent some of my clear shots to the birding friends and after some time I got a reply that the bird I have photographed is Brown breasted Flycatcher.

Asian Brown Flycatcher is residential migratory bird from the North visiting Cooler places of South during the winter. Similarly Brown breasted Flycatcher and Rusty tailed Flycatcher also migrate to the cooler Western ghat regions during the heavy winter of the North.

It is now to debate whether taking field notes as in the past is enough or taking photos is also an additional advantage. During Salim Ali’s days it was not difficult to catch the bird as the population was dense in most of the cases and to leisurely identify the bird. But with dwindling population of the birds and with amateurism in the birding which is a necessary evil   in studying of the birds, definitely photographs help to identify the birds as always the birds cannot be identified with poor lighting or appearance due to distance or time.

Now that I am able to differentiate the Brown breasted Flycatcher with the Asian Brown Flycatcher and the rusty tailed as the name suggests, the differences are that the former has fairly paler legs and a  prominent eye ring with bigger eyeball and a long slender beak. The lower mandible of the beak is also pale while in the case of the Asian and Rusty tailed Flycatchers the beaks are short and flat with pale at the base. The eye ring is also not as conspicuous as that of Brown breasted Flycatcher. The legs are also black for the Asian Brown Flycatcher and the rusty tailed.

I am posting some photos of the birds and you can also differentiate when you have the chance to see them in the wild.


Asian Brown Flycatcher




Rusty tailed Flycatcher







Brown breasted Flycatcher




Wednesday, 16 December 2015

துன்பப்  பறவைகள்


அந்த நாள் ஞாபகம் வந்ததே
துன்பத்தைக்  காட்டிலும் இன்பமதிகம் .
அளவான வருமானம்
அரிசியும் ரேஷனில்தான் .
வருடமொரு முறை மட்டும்
தையல் காரனிடம் .
வாத்தியாரின் பயமுறுத்தலும்
கொஞ்சமதிகம்தான் .
ஆனாலும் வானத்துப் பறவை போல்
ஊரெல்லாம் ஓடினோம்
தூய நீரில் நீந்தினோம்
பசித்துண்டோம் 
இக்கால குழந்தைகள் போல்
புறாக் கூண்டினுள்
புத்தக மூட்டையுள் , அசுத்த சூழலில்
பெற்றோர் குறிக்கோள் படி
வாழவில்லை .
ஏனோ  இக்காலக் குழந்தைகள்
துன்பப் பறவைகளே!
  

 போர் 
 போரின் கொடுமை அதிகம்தான்
ஆனால் எதிரிகளற்ற மனிதத்திற்கு
மனிதன் மட்டுமே எதிரி .

குறைந்த வளங்களை எத்துணை
பேருக்கு பகிர்வதாம்?

வீடுகளாகிப் போன விளைநிலங்கள்
குடோன்களாகிப்  போன குளம் குட்டைகள்
மலைகள்காடுகள் எதையும் விடவில்லை .

பல கோடி வருட அழிவுகளை
பத்திரண்டு ஆண்டில் சாதித்தது
 மக்கள் தொகையின் மறுபக்கம் .

இயற்கை  இன்னமும் கருணையின் வடிவே !
இல்லாவிடில் பூகம்பங்களுக்கும்புயல்களுக்கும்
முன் மனிதன் எம்மாத்திரம்?

மனிதப் பேராசை மற்றுமன்று போர்
மனித அழிவுகளுக்கும் விடியலும்தான் !
   
யானை
  
காடுகள் திருத்தி நாடுகளாக்கி
கோட்டை கொத்தளங்கள் பலமாகவமைத்து
உயர கோபுரங்களில் பாரங்கள் சுமந்து
போர்களங்களிலும் முன்னே நடந்து
 மானுட நாகரிகத்திற்கு துணை நின்றாய்!
ஆனால் ஐம்பது காசுக்கு ஆசிர்வதிப்பது எதற்கோ?

Monday, 14 December 2015

பட்டை தலை வாத்துகள் 




இந்த ஆண்டு (2015) எனக்கு பறவை நோக்கலை பொறுத்தவரையுலும் அதிர்ஷ்டமான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். வலசை வரும்,பறவைகளான சாவ்லர் , பின்டைல், கர்காணி போன்ற பறவைகளுடன் காமன் டீல், காட்டன் டீல், லெசெர் விசிலிங் டக், போன்ற வகை வாத்துகளை முதல் முறையாக புகைப்படம் எடுக்க முடிந்தது மட்டுமல்லாது மறந்திருந்த அடையாளங்களை மறுபடியும் ஞாபக படுத்தி பார்க்க முடிந்ததில் ஒரு சந்தோஷமே!

எப்பொழுதோ எங்கோ ஒரு முறையே பார்த்திருந்த காட்டன் டீல் போன்ற பறவைகளை குறிச்சி குளத்திலும், பேரூர் குளத்திலும் எண்ணற்ற கணக்கில் பார்த்து பரவசப் பட்டேன். அதே மாதிரி லெசர் விசிலிங் டக் பேரூர் குளத்தில் பல முறை அதிக எண்ணிக்கையில் பார்த்ததும் அதை புகைப்படம் எடுக்கமுடிந்ததிலும் கிடைத்த இன்பமே அலாதிதான்.

குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகளில் ஒன்று பார் ஹெடெட் கூஸ் (BAR HEADED GOOSE ) அல்லது பட்டை தலை / நீர் வாத்து .இது மிகவும் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பெரிய பறவையாகும். இமய மலையை கடந்து வருவதாக நம்பப் படுகின்றது. மிகவும் உயரமாகவும் பறக்கக் கூடியது மட்டுமில்லாது குறைந்த அளவே பிராண வாயு உள்ள வளி மண்டலத்தில் பறக்க கூடிய வகையில் அதன் சுவாசிக்கும் திறன் / நுரையீரல் மாற்றமடைந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வலசை வருகின்றது. இது பொதுவாக தாவர உணவுகளே உட்கொள்ளும் . பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் நீர்நிலைகளின் அருகிருக்கும் வயல் வெளிகளில் மேயும். பின்னர் நீர் நடுவேயுள்ள திட்டுகளிலும் கரை ஓரங்களிலும் ஓய்வு எடுக்கும்.

பொதுவாக வட இந்திய பகுதிகளில் வலசை வந்து திரும்பும் இப்பறவை தமிழ் நாட்டுக்கும் வருவது அதிசயம்தான். அதிலும் திருப்பூர் அருகிலுள்ள நஞ்சராயன் குட்டைக்கு இப்பறவைகள் வலசை வருகின்றன. 20-30 பறவைகள் திருப்பூர் வந்து செல்கின்றன. இம்முறை வலசை வருவது சந்தேகமே என்று பறவை ஆர்வலர்கள் நினைத்தார்கள். ஏனென்றால் போன வருடம் குளத்தில் உள்ள மரங்கள் முழுவதையும் அரசு இயந்திரங்கள் காசு பார்ப்பதற்காக வெட்டி விட்டனர்.மொட்டை குளத்திற்கு பறவைகள் வருவது சந்தேகமே என்று இருந்த நேரத்தில் LATE ஆக வந்தாலும் LATEST ஆக வருவேன் என்று 30-40 பட்டை தலை வாத்துகள் வந்துள்ளன.

நான் சென்ற பொழுது நீரெல்லாம் குறைந்து சாக்கடையாக குளம் இருந்தது. வடக்கிலிருந்து இமயம் தாண்டி வரும் விருந்தாளிகளை இப்படியா வரவேற்பது? நம் நீர்நிலைகளின் தரம் மிகவும் மோசம். ஏற்கனவே குறைந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை இம்மாதிரி நீர் நிலைகளினால் இன்னமும் அழியும்.

சென்னை மழை சம்பவத்துக்கு பின்னராவது நம் நீர் நிலைகளை காக்கும் எண்ணம் சிறிதாவது வந்தால் பரவாயில்லை. பல ஆயிரம் வருடங்களாக நடக்கும் வலசை வரும் விநோதமானது நம் தலை முறையால் அழியக்கூடாது. அது மட்டுமில்லாது தூய நீர்நிலைகள் நமது சொத்துக்கள். நம் பண்பாட்டை பறை சாற்றுபவை. மனிதனின் சுய நலத்திற்காக சுரண்ட படக்கூடாது. நீர்நிலைகள் குடி நீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானவை. பறவைகளினால் நீர் நிலைகள் ஊட்டம் பெறுகின்றன. கால்சியம் மற்றும் நைட்ரஜன் எருக்கள் வலசை வரும் பறவைகளின் எச்சங்களினால் கிடைகின்றது. விவசாயத்திற்கு எதிரியான பல வகை பூச்சிகளின் எண்ணிக்கை பறவைகளினால் கட்டுப் படுகின்றன. ஆகையால் நீர்நிலைகளை காத்து, வலசை வரும் நண்பர்களையும் வரவேற்போம்.

பட்டை தலை வாத்துகள் 






விசிலிங் வாத்துகள் 






காட்டன் டீல் 



Sunday, 25 October 2015

நீர்கோழி 


ஒவ்வொரு முறையும் பறவை நோக்கலுக்குச் செல்லும் பொழுது இன்று என்ன பறவை பார்ப்போம் என்ற எதிர் பார்ப்போடு செல்லுகிறோம் . வலசை  வரும் பறவைகள் ஏதேனும் பார்ப்போமா அல்லது அங்கேயே குடியிருக்கும் resident பறவைகள் புதியதாய் ஏதேனும் கண்ணுக்குத் தெரிகின்றதா என்று தொலைநோக்கி மூலம் ஒரு இடம் விடாமல் கரைகளையும் நீரிலும் காட்டின் உச்சி மரங்கள் மீதும் பார்த்து ஏக்கம் அடைய அவ்வாறு ஏதேனும் பறவைகளை பார்த்து விட்டால் அடையும் சிலிர்ப்பே தனிதான். 

25/10/2015 அன்று பேரூர் அல்லது புட்டுவிக்கி எனப்படும் ஏரி சென்றோம். பேரூர் ஏரி மிகவும் அழகான ஏரியாகும். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து தூய நீராதாரமுடைய ரம்மியமான ஏரி மட்டுமல்லாது வலசை வரும் பறவைகளும் அதிகம் வரும் ஏரியாகும். 

ஏற்கனவே garganey, pin -tail , போன்ற வலசை வரும் வாத்துகளை அங்கேதான் முதல் முதலில் நான் கண்டேன். Wooly necked stork, Open billed என்ற நாரை வகைகளையும் அங்கே பார்த்திருக்கிறேன். 

இம்முறை அங்கே செல்லும் பொழுது வித்தியாசமான ஒரு பறவையினை பார்க்க நேர்ந்தது.WATER COCK  எனும் நீர் கோழி ஒன்றின் பெட்டையினை கண்டேன். மர நிறத்து வரிகளையும், சாதாரண கோழியினை விட சிறிது பெரிதாகவும் ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடனும் அந்த கோழி புதர்களிடை மறைந்து சென்றது. 

கிடைத்த சிறிது நேர இடைவெளியில் எடுத்த புகைப்படம் இரண்டை உங்களுக்காக இணைத்துள்ளேன். நீங்களும் அதைப் பார்த்து மகிழுங்களேன்!