நீர்கோழி
ஒவ்வொரு முறையும் பறவை நோக்கலுக்குச் செல்லும் பொழுது இன்று என்ன பறவை பார்ப்போம் என்ற எதிர் பார்ப்போடு செல்லுகிறோம் . வலசை வரும் பறவைகள் ஏதேனும் பார்ப்போமா அல்லது அங்கேயே குடியிருக்கும் resident பறவைகள் புதியதாய் ஏதேனும் கண்ணுக்குத் தெரிகின்றதா என்று தொலைநோக்கி மூலம் ஒரு இடம் விடாமல் கரைகளையும் நீரிலும் காட்டின் உச்சி மரங்கள் மீதும் பார்த்து ஏக்கம் அடைய அவ்வாறு ஏதேனும் பறவைகளை பார்த்து விட்டால் அடையும் சிலிர்ப்பே தனிதான்.
25/10/2015 அன்று பேரூர் அல்லது புட்டுவிக்கி எனப்படும் ஏரி சென்றோம். பேரூர் ஏரி மிகவும் அழகான ஏரியாகும். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து தூய நீராதாரமுடைய ரம்மியமான ஏரி மட்டுமல்லாது வலசை வரும் பறவைகளும் அதிகம் வரும் ஏரியாகும்.
ஏற்கனவே garganey, pin -tail , போன்ற வலசை வரும் வாத்துகளை அங்கேதான் முதல் முதலில் நான் கண்டேன். Wooly necked stork, Open billed என்ற நாரை வகைகளையும் அங்கே பார்த்திருக்கிறேன்.
இம்முறை அங்கே செல்லும் பொழுது வித்தியாசமான ஒரு பறவையினை பார்க்க நேர்ந்தது.WATER COCK எனும் நீர் கோழி ஒன்றின் பெட்டையினை கண்டேன். மர நிறத்து வரிகளையும், சாதாரண கோழியினை விட சிறிது பெரிதாகவும் ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடனும் அந்த கோழி புதர்களிடை மறைந்து சென்றது.
கிடைத்த சிறிது நேர இடைவெளியில் எடுத்த புகைப்படம் இரண்டை உங்களுக்காக இணைத்துள்ளேன். நீங்களும் அதைப் பார்த்து மகிழுங்களேன்!
No comments:
Post a Comment