ஆண்டாண்டு இவ்விடம் வலசை வரும் அக்கா குயிலே
ஏனோ இம்முறை இன்னமும் ஏங்க வைக்கிறாய்
உன் வலசை பாதை வரும் பூஞ்சை பருந்தும் சிவப்பு வல்லூறும் வந்து சேர்ந்தன
ஏனோ நீ வரவில்லை இன்னமும்
காரணம் அறியேன் நண்பா
இவ்விடம் இயற்கை அழித்து மனித நாகரிகம் வந்ததாலோ
வேறு இடம் நோக்கி நீ பறந்ததாலோ
இல்லை உன் ஆயுள் முடிந்து விண்ணுலகம் சென்றதாலோ
No comments:
Post a Comment