துன்பப் பறவைகள்
அந்த நாள் ஞாபகம் வந்ததே
துன்பத்தைக் காட்டிலும் இன்பமதிகம் .
அளவான வருமானம்
அரிசியும் ரேஷனில்தான் .
வருடமொரு முறை மட்டும்
தையல் காரனிடம் .
வாத்தியாரின் பயமுறுத்தலும்
கொஞ்சமதிகம்தான் .
ஆனாலும் வானத்துப் பறவை போல்
ஊரெல்லாம் ஓடினோம்
தூய நீரில் நீந்தினோம்
பசித்துண்டோம்
இக்கால குழந்தைகள் போல்
புறாக் கூண்டினுள்
புத்தக மூட்டையுள் , அசுத்த சூழலில்
பெற்றோர் குறிக்கோள் படி
வாழவில்லை .
ஏனோ இக்காலக்
குழந்தைகள்
துன்பப் பறவைகளே!
போர்
போரின் கொடுமை அதிகம்தான்
ஆனால் எதிரிகளற்ற மனிதத்திற்கு
மனிதன் மட்டுமே எதிரி .
குறைந்த வளங்களை எத்துணை
பேருக்கு பகிர்வதாம்?
வீடுகளாகிப் போன விளைநிலங்கள்
குடோன்களாகிப் போன குளம் குட்டைகள்
மலைகள், காடுகள் எதையும் விடவில்லை .
பல கோடி வருட அழிவுகளை
பத்திரண்டு ஆண்டில் சாதித்தது
மக்கள் தொகையின் மறுபக்கம் .
இயற்கை இன்னமும் கருணையின் வடிவே !
இல்லாவிடில் பூகம்பங்களுக்கும், புயல்களுக்கும்
முன் மனிதன் எம்மாத்திரம்?
மனிதப் பேராசை மற்றுமன்று போர்
மனித அழிவுகளுக்கும் விடியலும்தான் !
யானை
காடுகள் திருத்தி நாடுகளாக்கி
கோட்டை கொத்தளங்கள் பலமாகவமைத்து
உயர கோபுரங்களில் பாரங்கள் சுமந்து
போர்களங்களிலும் முன்னே நடந்து
மானுட
நாகரிகத்திற்கு துணை நின்றாய்!
ஆனால் ஐம்பது காசுக்கு ஆசிர்வதிப்பது எதற்கோ?
No comments:
Post a Comment